கடைகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

ஆறகளூரில் 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மற்றும் பொருள்கள் திருட்டு போனது குறித்து தலைவாசல் காவல்

ஆறகளூரில் 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மற்றும் பொருள்கள் திருட்டு போனது குறித்து தலைவாசல் காவல் ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூரில் கோவிந்தம்பாளையம் செல்லும் வழியில் கணேசன் (45) என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவருடைய கடையின் அருகில் சித்தேரியைச் சேர்ந்த தர்மலிங்கம் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். மற்றொரு கடையில் காமராஜர் என்பவர் அடார்ணர்ஸ் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை காமராஜர் தலைவாசல் செல்வதற்காக கடை வழியாக சென்ற போது, கடைகள் திறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு சென்று பார்த்த போது, மூன்று கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாம். இதனையடுத்து, மற்றவர்களுக்கும், தலைவாசல் போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதில் கணேசன் மளிகைக் கடையில் ரூ.35 ஆயிரம் மற்றும் சில பொருள்கள், தர்மலிங்கம் கடையில் ரூ.12 ஆயிரம், காமராஜர் கடையில் ரூ.1,500 திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து தலைவாசல் காவல் ஆய்வாளர் குமாரவேல்பாண்டியன் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com