சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இடிக்கும் பணி தொடக்கம்

சேலத்தில் ரூ.92.13 கோடியில் புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டப்படுவதைத் தொடர்ந்து, பழைய பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.


சேலத்தில் ரூ.92.13 கோடியில் புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டப்படுவதைத் தொடர்ந்து, பழைய பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் 57 ஆண்டுகள் பழமையான பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதியதாக ரூ.92.13 கோடியில் ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  போஸ் மைதானத்தில் ரூ.3 கோடி மதிப்பில் தாற்காலிக பேருந்து நிலையம் கட்டப்பட்டு போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, பழைய பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த பணிகள் ஓரிரு வாரங்களில் முடிவடைந்த பிறகு ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:-
ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் மின்தூக்கிகள், குளிரூட்டப்பட்ட பயணிகள் அறை, உணவகம், குழந்தைகளுக்கான விளையாட்டு இடம் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும். 2 ஆண்டுகளில் பணி முடிவடையும். இதற்கான நிதி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு விட்டதால்,  தற்போது பழைய பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com