ஆண், பெண் என்ற பாலின பாகுபாட்டை ஒழிக்க வேண்டும்: ச. தமிழ்ச்செல்வன் 

ஆண், பெண் என்ற பாலின பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் பேசினார்.


ஆண், பெண் என்ற பாலின பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் பேசினார்.
சேலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாநில பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாநில துணைத் தலைவர் ரோகிணி பங்கேற்றார். 
விழாவுக்கு கௌரவத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து, பெண் வாழ்வும் கலை இலக்கியமும் என்ற தலைப்பில் பேசியதாவது:
ஆண் மனதின் பிரச்னையை சங்க இலக்கியங்களின் வாயிலாக விசாரணைக்குள்படுத்தி எதிர்கால படைப்பை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதே இந்தப் பயிலரங்கத்தின் நோக்கமாகும். பெண்கள், ஆண்களின் பசியை தீர்க்கும் உணவுப் பொருள்களோ, ஆண்களுக்கு சேவை செய்பவர்களோ இல்லை என்பதை ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆண், பெண் என்ற பாலின பாகுபாட்டை ஒழிக்க வேண்டும்.
பெண்கள், ஆண்களுக்கு சமம் என்பதை உணரந்து, ஆண்கள் தனது குற்றங்களை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இன்றைய சமூதாயத்தில் பெண்களின் வாழ்க்கை நிலை உயரும்.  
ஆதிகாலத்தில் பெண்கள் சமூகத்தின் சொத்தாக கருதப்பட்டனர். ஆண்களை விட பெண்களே மனதால் வலிமையுடையவர். எனவே தான் ஆதிகாலத்திலிருந்தே குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்புகளை பெண்களுக்கு அளித்துள்ளனர்.
ஆனால், பிற்காலத்தில்  ஆண்களுக்கு சேவை செய்வதற்கே பெண்கள் என்ற கருத்து எழுந்தது. அத்தகைய தவறான கருத்துகளை நாமும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. பெண்களின் எதிர்காலத்தை பெண்களே முடிவு செய்ய வேண்டும். மாற்றம் நிகழவில்லையே என்று பெண்கள்  கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். பெண்கள் துணிந்து செயல்பட வேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் கவிஞர் வி.எஸ்.பிந்து, சொற்பொழிவாளர் கல்பனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com