மேட்டூர் ஐடிஐ-யின் தற்காலிக பயிற்றுநருக்கானவிண்ணப்பங்கள் வரவேற்பு

மேட்டூர் ஐ.டி.ஐ-யின் தற்காலிக பயிற்றுநருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மேட்டூர் அணைத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் லீமாரோஸ் தெரிவித்தார்.

மேட்டூர் ஐ.டி.ஐ-யின் தற்காலிக பயிற்றுநருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மேட்டூர் அணைத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் லீமாரோஸ் தெரிவித்தார்.
மேட்டூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் துவங்கப்பட்டுள்ள கம்மியர் குளிர்சாதனம் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாகப் பணிபுரிய முன்னுரிமை அற்றவர்கள் அடிப்படையில்  பயிற்றுநர் நியமனம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மேட்டூர் அணை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் லீமாரோஸ் தெரிவித்ததாவது:
மேட்டூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பி.பி.பி. திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு புதிதாகத் துவங்கப்பட்டுள்ள குளிர்சாதனம் தட்ப வெப்பநிலை கட்டுப்படுத்துதல் பிரிவுக்கு ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிமாகப் பணிபுரிய முன்னுரிமை அற்றவர்கள் அடிப்படையில் பயிற்றுநர் நியமணம் செய்யப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தொழிற் பிரிவில் தேர்ச்சி பெற்று என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மூன்று வருட காலம் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சிஐடிஎஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் வருகிற ஜூலை 7-ஆம் தேதிக்குள் 35 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்காணும் தகுதியுடைய நபர்கள் தங்களது பெயர், கல்வித்தொகை, இனம் மற்றும் முகவரி, செல்லிடப்பேசி எண்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மேட்டூர் அணை-636 452 என்ற முகவரிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி உடைய நபர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு 04298-244065 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயனடையலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com