சேலத்தின் கலை, பண்பாடு மீட்டுருவாக்கப்பட வேண்டும்முன்னாள் துணைவேந்தர்  இ.சுந்தரமூர்த்தி

சேலம் மாவட்டத்தின் கலை, பண்பாட்டுக் கூறுகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என  தஞ்சைத் தமிழ்ப்

சேலம் மாவட்டத்தின் கலை, பண்பாட்டுக் கூறுகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 21-ஆம் தேதி உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. விழா பெரியார் பல்கலைக்கழகப் பதிப்புத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தலைமை வகித்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் பேசியதாவது: ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகளில் உள்ளது போல விஞ்ஞானத்தையும் அவரவர் தாய் மொழியில் கற்கின்ற நிலை உருவாக வேண்டும். தமிழ்நாட்டிலும் அதுபோன்ற நிலை உருவாக வேண்டுமானால் அறிவியல் நூல்களைத் தாய்மொழியில் உருவாக்க வேண்டும். அதற்காக பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பல அரிய நூல்களைப் பதிப்பிக்க உள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றிய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி பேசியதாவது:
பல அறிஞர்களும் கொண்டாடி மகிழ்கின்ற இலக்கியமாக நமது இலக்கியம் உள்ளது. அழகியல் கூறுகள் மட்டுமல்லாமல், வாழ்வியல் கூறுகளும் பொதிந்துள்ள களஞ் சியமாக இருப்பது நமது இலக்கியமாகும். பண்பாட்டைப் பாதுகாக்கும் பெட்டகம் தான் மொழி. மொழியைப் பாதுகாக்க வேண்டுமெனில் அந்த மண்ணின் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் செழித்துக் காணப்படும் கலை, பண்பாட்டுக்கூறுகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் டாக்டர் இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் மா.ரா.அரசு சிறப்புரையாற்றினார். பதிப்புத்துறையின் இயக்குநர்(பொறுப்பு) பேராசிரியர் மோ.தமிழ்மாறன் வரவேற்றார். பதிப்புத் துறையின் துணை இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com