சேலம் வடக்கு, தெற்கு தொகுதிகளில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் துவக்கம்

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சேலம் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 539 வாக்குச்சாவடிகளில்

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சேலம் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 539 வாக்குச்சாவடிகளில் பிப்.23, 24 ஆகிய 2 நாட்கள் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தால் பிப். 23 மற்றும் பிப். 24 ஆகிய 2 நாள்கள் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சேலம் வடக்குத் தொகுதிக்குட்பட்ட 268 மையங்கள், சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட 271 மையங்கள் என மொத்தம் 539   வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 
இம் முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர் பெயர் சேர்த்திடவும், தொகுதி மாறி இடம் பெயர்ந்த வாக்காளர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் - 6 பூர்த்தி செய்து விண்ணப்பித்திட வேண்டும். 
இரு முறை வாக்காளர்களாக பதிவாகியுள்ளவர்கள் பெயர் நீக்கம் செய்திடவும், தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு இடம் மாறுதல் செய்தவர்களும், தங்களது பெயர்களை நீக்கம் செய்திட படிவம் - 7 பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பெயர் திருத்தம், முகவரி திருத்தம்/ பாலின திருத்தம், வயது திருத்தம், வாக்காளர் பட்டியல் புகைப்படம் மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் - 8 பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாகம் விட்டு பாகம் இடம் மாறிய வாக்காளர்கள் படிவம் - 8 ஏ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 2,000 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அதற்கு முன்பு பிறந்து 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இம் முகாமில் உரிய விண்ணப்பங்களைப் பெற்று பிறப்புச் சான்றிதழ் மற்றும் முகவரிக்கான சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்து,  தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம். 
மேலும், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க / திருத்தம் / நீக்கம் மேற்கொள்ள   w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்  என ஆணையாளர் ரெ. சதீஷ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com