இளைஞர் நாடாளுமன்றம்: பங்கேற்க இன்றும், நாளையும் பதிவு செய்யலாம்

இளைஞர் நாடாளுமன்றத்தில் பங்கேற்பதற்கான பதிவு  சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

இளைஞர் நாடாளுமன்றத்தில் பங்கேற்பதற்கான பதிவு  சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
மத்திய அரசின் இளைஞர் நலம்,  விளையாட்டு துறை சார்பில் தேசிய இளைஞர் நாடாளுமன்றம் என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான போட்டி நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் இளைஞர்கள் சென்னை நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்கத்தால் தெரிவு செய்யப்படுகின்றனர். இதற்காக, சேலம் மாவட்ட இளைஞர்கள் தேர்வு  சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையடுத்து, சேலம் மாவட்ட அளவிலான இளைஞர்
நாடாளுமன்றமானது கல்லூரியில் ஜனவரி 24-இல் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் தேர்வு பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். நேர்காணலில் 18 முதல் 25 வயதுக்குள்பட்டோர் பங்கேற்கலாம். 
தூய்மை இந்தியா, வறுமை, ஊழல், தீவிரவாதமும் தேசிய பாதுகாப்பும், வகுப்புவாதம், நல்லாட்சி,  சுற்றுப்புறப் பாதுகாப்பு எனும் பொருளில் ஏதேனும் ஒன்றில் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்.
நேர்காணலில் பங்கு கொள்ள இயலாத இணையர்கள் h‌t‌t‌p://‌i‌n‌n‌o‌v​a‌t‌e.‌m‌y‌g‌o‌v.‌i‌n/‌y‌o‌u‌t‌h‌p​a‌r‌l‌i​a‌m‌e‌n‌t  என்ற இணையதளத்தின் வாயிலாக தங்கள் கருத்துகளை வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம்.
கூடுதல் விவரங்களை 9894947770, 9047571611 என்ற செல்லிடப்பேசி எண்களில் பேசி அறியலாம்  என்று கல்லூரி முதல்வர் கீதா கென்னடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com