கிராமங்களின் நிலைத்தன்மை குறித்து ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்

பழனி மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், திறந்தவெளி மலம் கழிக்கும்

பழனி மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கமற்ற கிராமங்கள் நிலைத்தன்மை குறித்து ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழனி வட்டார அளவிலான இக் கூட்டத்துக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏழுமலையான், சாந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், பழனி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் எவ்வாறு திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கமற்ற ஊராட்சிகளாக மாற்றுவது என்று விவாதிக்கப்பட்டது.    இதற்கு, அனைத்துத் துறை அலுவலர்களும் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும், ஊராட்சிகளில் சுத்தம் சுகாதாரம் குறித்து ஊக்குவிப்பாளர்கள், கிராம செவிலியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள்  இணைந்து கூட்டங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிகளில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரக் குழு ஏற்படுத்தவும், பள்ளி கழிப்பறை அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்தவும், பராமரிக்கவும் வேண்டும்,  கிராமங்களில் உள்ள மக்களிடையே ஊட்டச்சத்து, ரத்த சோகை, டெங்கு காய்ச்சல், குடல் புழுத் தொற்று, தாய் சேய் நலத்துக்கும் கழிப்பறை பயன்பாட்டுக்கும் உள்ள தொடர்பு  குறித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இக் கூட்டத்தின் போது, அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டன. அதிலுள்ள செயலி மூலம் குழந்தைகள் பிறப்பு விவரம், கர்ப்பிணி தாய்மார்கள் விவரம், ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள பகுதி உள்ளிட்ட விவரங்கள் நாள்தோறும் பதிவு செய்யப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் வகாப், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மதினாபேகம், வட்டாரக் கல்வி அலுவலக அலுவலர் இளங்கோ, வட்டார ஒருங்கிணைப்பாளர் வஞ்சிக்கொடி மற்றும் ஊராட்சி அலுவலக பல்வேறு நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கொடைக்கானல்: கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியச் செயலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கிராமப்புறங்களிலுள்ள அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக கழிப்பறை கட்டுவதற்கான விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். கிராமப் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com