கொடைக்கானல் அருகே மர்ம காய்ச்சல் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை

கொடைக்கானல் அருகே கூக்கால் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே கூக்கால் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதியில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டிருந்து. இதனைத் தொடர்ந்து வட்டார மருத்துவர் அரவிந்த் தலைமையில் மருத்துவக் குழுவினர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இது குறித்து வட்டார மருத்துவர் அரவிந்த் கூறியது:
கொடைக்கானல் பகுதிகளில் நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. ஆகவே தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். கிராம ப்புறங்களிலுள்ள தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
கோட்டாட்சியர் ஆய்வு: பாரதிஅண்ணாநகர் பகுதியிலுள்ள ஆதிவாசிகுடியிருப்பில் 10 பேருக்கு  மர்ம்க் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்களை கோட்டாட்சியர் சிவக்குமார் நேரில் சென்று பார்த்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். மேலும் வெள்ளிக்கிழமை இப் பகுதிக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com