6 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்தும் சாலை அமைக்கவில்லை: திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைப்பதற்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், தற்போது வரை பணிகள் 

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைப்பதற்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை என ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அடுத்துள்ள தருமத்துப்பட்டி பகுதி பொதுமக்கள்  ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் தலைமையில்  மனு அளிக்க வந்தனர். அவர்கள் கூறியதாவது:
தருமத்துப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிதிராவிடர் காலனியிலிருந்து இந்திரா நகர் செல்லும் பாதையில், தாய் திட்டத்தின் மூலம் சிமெண்ட் சாலை அமைக்க கடந்த 2012ஆம் ஆண்டு ரூ.20 லட்சத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை பணிகள் நடைபெறவில்லை. ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தின் நிலை குறித்தும் தெரியவில்லை.  செவணக்காரன்பட்டி கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசதித்து வரும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாக செயல்படவில்லை. இதனால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. 
வேலன்சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில், திமுக ஆட்சிக் காலத்தில் வீடு கட்டம் திட்டத்தின் கீழ் 30 ஆண்டுகளாக வசித்து வரும் 95 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இன்று வரை வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை. பட்டாவும் வழங்கவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே, பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com