ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி, வெண்டைக்காய் விலை குறைவு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் திங்கள்கிழமை தக்காளி மற்றும் வெண்டைக்காய் விலை குறைந்து விற்பனையானது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் திங்கள்கிழமை தக்காளி மற்றும் வெண்டைக்காய் விலை குறைந்து விற்பனையானது.
தக்காளி மற்றும் வெண்டைக்காய் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் ரூ.110-க்கு விற்ற14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.80-க்கு விற்பனையானது. மேலும்,  கிலோ ரூ.13-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.10-க்கும் விற்பனையானது. 
மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோ அளவில்): டிஸ்கோ கத்தரிக்காய் (30 கிலோ பை) ரூ.200, செடி முருங்கை ரூ.16, கரும்பு முருங்கை ரூ.12, மர முருங்கை ரூ.10,சுரைக்காய் ரூ.10,வெள்ளை தட்டப்பயிர் ரூ.22, பாகற்காய் ரூ.12 முதல் ரூ.14 வரை, பீன்ஸ் ரூ.20, ரிங் பீன்ஸ் ரூ.15, முருங்கை பீன்ஸ் ரூ.30, புஸ் பீன்ஸ் ரூ.22, ஒட்டு அவரை ரூ.25, நார்த்தை ரூ.30, சவ்சவ் ரூ.10-க்கு விற்பனையானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com