திண்டுக்கல்லில் பான் செக்கர்ஸ் மகளிர் கலைக் கல்லூரி தொடக்கம்

திண்டுக்கல்லில் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல்லில் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மதுரை சாலையில் அமைந்துள்ள அவர் லேடி ஆப் லூர்ட்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைப்பு சார்பில், பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் டாக்டர் தாமஸ்பால்சாமி திருப்பலி நிறைவேற்றினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது.  
பான் செக்கர்ஸ் அருட்கன்னியர் சபையின் தலைமை சகோதரியும், கல்லூரி தலைவருமான முனைவர் மரியபிலோமி முன்னிலை வகித்தார். மக்களவை உறுப்பினர் உதயகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி, முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கல்லூரிச் செயலர்  முனைவர் மரியம்மாள் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பான் செக்கர்ஸ் கன்னியர் சபையின் பொதுச் செயலர் சகோதரி டெரன்சியா நன்றி கூறினார். 
நிகழ்ச்சியில் புரவலர்கள் ஹாஜி மொகைதீன், சுந்தர்ராஜன், உயர்நீதி மன்ற மூத்த வழக்குரைஞர் சேவியர் அருள்ராஜ், அன்னை தெரசா பல்கலை. பதிவாளர் சுகந்தி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  இந்த கல்லூரியில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com