தைப்பூசம்: திண்டுக்கல்லில் 5 கோயில் உற்சவர்களுக்கு தீர்த்தவாரி

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதியிலுள்ள 5  கோயில்களின் உற்சவ மூர்த்திகளுக்கு திங்கள்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது. 

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதியிலுள்ள 5  கோயில்களின் உற்சவ மூர்த்திகளுக்கு திங்கள்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது. 
திண்டுக்கல் நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், வெள்ளை விநாயகர் கோயில், கந்தகோட்டம் முருகன் கோயில், வண்டிகாளியம்மன் கோயில், 108 விநாயகர் கோயில்களில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த கோயில்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் தனித்தனி சப்பரத்தில் கோட்டை மாரியம்மன் கோயில் திடலுக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர், மேளதாளம் முழங்க பாலம் ராஜாக்காப்பட்டி கொடகனாற்றுக்கு உற்சவ மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. கொடகனாற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், உற்சவ மூர்த்திகளுக்கான தீர்த்தவாரிக்கு லாரி தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டது. 
கொடகனாற்று கரையில், உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை 4 மணிக்கு பிறகு உற்வச மூர்த்திகள் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டனர். ரத வீதிகளில் உலா வந்த உற்சவர்கள் மீண்டும் கோட்டை மாரியம்மன் கோயில் திடலை வந்தடைந்தனர். அங்கு, சிறப்பு தீபாராதனைக்குப் பின் அந்தந்த கோயில்களுக்கு உற்சவ மூர்த்திகள் திரும்பினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோட்டை மாரியம்மன் கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் எஸ். சண்முக முத்தரசப்பன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
திருமலைக்கேணியில் தைப்பூசத் திருவிழா: தைப்பூசத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அடுத்துள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமிக்கு மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல், திண்டுக்கல் சித்தி விநாயகர் கோயிலிலுள்ள சுப்பிரமணிய சுவாமி, நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள தண்டபாணி சுவாமிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சின்னாளபட்டி கடைவீதி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு சந்தனக்காப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com