கமுதி அருகே அரசு நூற்பாலை தொழில்நுட்ப பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

கமுதி அருகே அரசு நூற்பாலை தொழில் நுட்ப பணியாளர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில்

கமுதி அருகே அரசு நூற்பாலை தொழில் நுட்ப பணியாளர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடவுள்ளதால் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கமுதி அடுத்துள்ள அபிராமம் அருகே அச்சங்குளத்தில் 18 ஆண்டுகளுக்கு முன் அரசு நூற்பாலை தொடங்கப்பட்டது. இதன் மூலம் காதி கிராப்ட் நிறுவனம் வணிகரீதியிலான நூல்  உற்பத்தி செய்து வந்தது. இதில், லாபம் இல்லாததால், 10 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த இந்த ஆலை, கடந்த 2015 ஆம் ஆண்டு அரசின் ரூ.28 கோடி ஒதுக்கீட்டின் கீழ் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதில் 17 தொழில் நுட்ப பணியாளர்களும், 120 தொழிலாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 375 ரூபாயும், தொழிலாளர்களுக்கு 325 ரூபாய் என சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நடப்பாண்டில் ஜனவரி முதல் தேதியிலிருந்து தொழில் நுட்ப பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை. இது குறித்து கடந்த செப். 7 இல், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அக். 22 இல் பேச்சுவார்த்தை நடந்தது. 
இதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை முதல் வேலை  நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால்,  "ஷிப்ட்'  ஒன்றுக்கு 1,800 கிலோ நூல் வீதம், தினமும் 3 "ஷிப்ட்' டுகளுக்கு, ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,400 கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுவது முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com