கூட்டுறவு வாரவிழாவில் ரூ.9.86 கோடி நலத்திட்ட உதவி: அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற 65-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1,383 பயனாளிகளுக்கு ரூ.9.86 கோடி

ராமநாதபுரத்தில் நடைபெற்ற 65-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1,383 பயனாளிகளுக்கு ரூ.9.86 கோடி மதிப்பிலான நலத்திட்டம், கடனுதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சனிக்கிழமை வழங்கினார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்து, மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். ஊராட்சி அளவிலான 93 கூட்டமைப்புக் குழுக்களுக்கு 1,383 பயனாளிகளுக்கு ரூ. 9.86 கோடி மதிப்பிலான நலத்திட்டம் மற்றும் கடனுதவிகளை வழங்கி அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது:
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில், பயிர்க்கடனாக மாநிலம் முழுவதும் 2011 முதல் 2018 வரை 75,42,112 பயனாளிகளுக்கு ரூ.37,764.04 கோடி வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 90,008 பேருக்கு ரூ.349.16 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
 நடப்பாண்டில் மாநிலம் முழுவதும் ரூ.8000 கோடி அளவிலும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ.85 கோடி மதிப்பிலும் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12,02,075 பேருக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  
மேலும், 2016-17 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர்க் காப்பீடு செய்த 12,01,889 விவசாயிகளுக்கு 31.10.2018 வரை 11,61,251 விவசாயிகளுக்கு ரூ.3,350.27 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ரூ.545 கோடி மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, வறட்சி நிவாரணம், தானே புயல் நிவாரணம், வெள்ள நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, பயிர் காப்பீடு இழப்பீடு என தமிழகம் முழுவதும் 2011 முதல் 31.10.2018 வரையில் 98,08,537 பேருக்கு ரூ.13,922.53 கோடி மதிப்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன், முதுகுளத்தூர் எம்எல்ஏ எஸ்.பாண்டி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.மு.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சா.திருகுணஐயப்பதுரை, விருதுநகர் மண்டல மீனவர் கூட்டுறவு சம்மேளன தலைவர் ஏ.வேலுச்சாமி,  சரக துணைப் பதிவாளர் ச.கணேசன் உள்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com