கிராம நிர்வாக அலுவலர்கள் பற்றாக்குறை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல்

கமுதி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பற்றாக்குறையால், பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

கமுதி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பற்றாக்குறையால், பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
    கமுதி தாலுகாவுக்குள்பட்ட 47 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 34 பேர் மட்டுமே உள்ளதால், 13 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, பிற பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் காலிப் பணியிடங்களையும் சேர்த்து கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.
   சமீபத்தில், முதுகுளத்தூர் அருகே கருமல் கிராம நிர்வாக அலுவலரை, பரமக்குடி சார்-ஆட்சியர் விஷ்ணுசந்திரன் பணியிடை நீக்கம் செய்ததால், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த வருவாய் குரூப், பதிவேடுகளை வட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒப்படைத்து போராட்டம் நடத்தினர். 
 இந்நிலையில், நவம்பர் 30-க்குள், பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி தேதியாக, மாவட்ட நிர்வாகம்  அறிவித்துள்ளது. 
   பருவமழை பொய்ப்பால், பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களின் மூவிதழ் அடங்கல்களை பெற்று, கூட்டுறவு, தேசியமயமாக்கபட்ட வங்கிகளில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து வருகின்றனர். 
   இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள், கூடுதல் பணிகளை செய்ய மறுத்து, வட்டாட்சியரிடம் பதிவேடுகளை ஒப்படைத்துள்ளபோதிலும், காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட  நிர்வாகம் நிரப்பவில்லை. இதனால், அப்பகுதி விவசாயிகள் சான்றுகளை பெற்று, பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
   எனவே, விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com