பொந்தம்புளி கண்மாயில் குடிமராமத்துப் பணி தொடக்கம்

கமுதி அருகே உள்ள பொந்தம்புளி கண்மாயில் குடிமராமத்துப் பணிகள் சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கமுதி அருகே உள்ள பொந்தம்புளி கண்மாயில் குடிமராமத்துப் பணிகள் சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பொந்தம்புளி கண்மாய் உள்பட 6 கண்மாய்கள் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் பணிகள் தொடங்குவதில் இழுபறி ஏற்பட்டது. இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியானது. 
அதைத்தொடர்ந்து, பொந்தம்புளி கண்மாயின் 4.5 கி.மீ. தூரமுள்ள கரைகளும், 8 கி.மீ. நீள வரத்து கால்வாயும் சீரமைக்கப்பட்டு வருகிறது. 
மழைக்காலம் தொடங்குவதற்குள் கண்மாயை சீரமைக்க, பொந்தம்புளி நீர்பாசன முன்னேற்ற சங்கம், விவசாயிகள் மூலம் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com