சக காவலரே வெளியிட்ட பொய்யான "ஆடியோ' காவலர் மீதான பணியிட மாறுதல் உத்தரவு ரத்து

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் சக காவலரே வெளியிட்ட பொய்யான "ஆடியோ' விவகாரத்தில் காவலர் பணியிட

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் சக காவலரே வெளியிட்ட பொய்யான "ஆடியோ' விவகாரத்தில் காவலர் பணியிட மாறுதல் உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரத்து செய்தார்.
கடலாடி அருகே உள்ள சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அரசு வழங்கும் கருணைத் தொகையான ரூ.25 ஆயிரம் கேட்டு, இவரது மனைவி அரியநாச்சி, அரசிடம் விண்ணப்பிக்க, வழக்கு விபரமும், தடையில்லா சான்றிதழும் கேட்டு கடலாடி காவல் நிலையத்தில் விண்ணப்பித்தார். சான்று வழங்க போலீஸார் ரூ.1000 வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே நிலையத்தில் பணியாற்றிய காவலர் மலர்ராஜ் என்பவர் மணல் கடத்தல் கும்பலுடன் பேசிய "ஆடியோ' வெளியானது. இதனால்  மலர்ராஜ்  தொண்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதில் அவருக்கும் தலைமை காவலர் முருகானாந்தத்துக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அரியநாச்சி விவகாரத்தில் முருகானந்தம் பணம் கேட்டதாக சமூக வலைதளத்தில் "ஆடியோ' ஒன்று வெளியானது.
இந்த "ஆடியோ' மாவட்ட கண்காணிப்பாளர் கவனத்திற்குச் செல்ல, முருகானந்தம் உடனடியாக  ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா நடத்திய விசாரணையில், தலைமை காவலரை பழிவாங்கும் நோக்கில் மலர்ராஜ் பொய்யான "ஆடியோ'வை தயார் செய்து  சமூக வலைதளத்தில் பரப்பியது தெரியவந்தது. 
இதையடுத்து தலைமைக் காவலர் முருகானந்தம் ஆயுதப்படைக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து, கமுதி நகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் அவர் நியமிக்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com