ராமேசுவரம் கோயிலில் பிப்.25 இல் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்ரவரி 25 ஆம் தேதி (திங்கள்கிழமை) மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்ரவரி 25 ஆம் தேதி (திங்கள்கிழமை) மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து, மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரி,  மார்ச் 5 இல் சுவாமி-அம்பாள் தேரோட்டம், மார்ச் 6 இல் மாசி மகா அமாவாசையையொட்டி பிற்பகல் 1.35 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்கினி தீர்த்தக் கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் அளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
இதனால், அன்றைய தினம் பிற்பகல் 1.35 மணி முதல் கோயில் நடை அடைக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என, கோயில் இணை ஆணையர் கோ.செ. மங்கையர்க்கரசி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com