"காங்கிரஸ்-திமுக கூட்டணியால் யாருக்கும் நன்மை இல்லை'

காங்கிரஸ்-திமுக கூட்டணியால் யாருக்கும் நன்மை விளையப் போவதில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

காங்கிரஸ்-திமுக கூட்டணியால் யாருக்கும் நன்மை விளையப் போவதில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 22) பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 
இதற்கான மேடை அமைக்கும் பணியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை இரவு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
மத்திய அரசு தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்ற நிர்வாகத்துக்கு ரூ.876  கோடியும், நகர்ப்புற வளர்ச்சிக்காக ரூ.731 கோடியும் வழங்கியுள்ளது. 
ஏற்கெனவே தமிழக வளர்ச்சிக்கு ரூ.1500 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தமிழக வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையிலேயே தொடர்ந்து நிதியை வழங்கியுள்ளார். பாஜக-அதிமுக கூட்டணியை கட்டாயத் திருமணமாக விமர்சிப்பதற்கு திமுக, காங்கிரஸுக்கு தகுதியில்லை. அவர்கள் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்பவர்களைப் போல கூட்டணிக்காக புதுதில்லிக்கு சென்று வருகிறார்கள். ஆனால் பாஜக-அதிமுக கூட்டணி திட்டமிட்டு முறைப்படி பேசப்பட்டு முடிவானதாகும்.
பிரமதர் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்புவோரை எங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம். தமாகா, தேமுதிக என யார் வந்தாலும் வரவேற்போம். கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள அதிமுக சார்பில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியால் யாருக்கும் பயனில்லை என்றார்.
 பேட்டியின் போது பாஜக மாநில நிர்வாகிகள் பி.டி.அரசகுமார், கருப்பு முருகானந்தம், குப்புராம், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் முரளிதரன், ஆத்மகார்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com