அரியமான் கடற்கரையில் மாநில அளவிலான கால்பந்து, கையுந்துபந்து, கபடி போட்டிகள்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில்  மாநில அளவிலான  கடற்கரை கால்பந்து, கையுந்துபந்து, கபடி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில்  மாநில அளவிலான  கடற்கரை கால்பந்து, கையுந்துபந்து, கபடி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மண்டம் பகுதியில் உள்ள அரியமான் கடற்கரையில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்றன.  போட்டிகளை  மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தொடக்கிவைத்தார். இதில் கால்பந்து போட்டியில், ஆடவர் பிரிவில் கன்னியாகுமரி மாவட்ட அணி முதலிடம் பெற்றது. சென்னை மாவட்ட அணி இரண்டாமிடம், ராநாதபுரம் மாவட்ட அணி மூன்றாமிடம் பெற்றன. மகளிர் பிரிவில் திருவாரூர் மாவட்ட அணி முதலிடம், தஞ்சாவூர் மாவட்ட அணி இரண்டாமிடம், கடலூர் மாவட்ட அணி மூன்றாமிடம் பெற்றன.
கையுந்து போட்டியில் ஆடவர் பிரிவில் நாகபட்டினம் அணி முதலிடம், சென்னை அணி இரண்டாமிடம், கன்னியாகுமரி அணி மூன்றாமிடம் பெற்றன. மகளிர் பிரிவில் கன்னியாகுமரி அணி முதலிடம், தூத்துக்குடி அணி இரண்டாமிடம், தஞ்சாவூர் அணி மூன்றாமிடம் பெற்றன. 
கபடி ஆடவர் பிரிவில் கடலூர் அணி முதலிடம், ராமநாதபுரம் அணி இரண்டாமிடம், நாகபட்டினம் அணி மூன்றாமிடம் பெற்றன. 
மகளிர் பிரிவில் காஞ்சிபுரம் அணி முதலிடம், தூத்துக்குடி அணி இரண்டாமிடம், தஞ்சாவூர் அணி  மூன்றாமிடம் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், சான்றுகளையும் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க்ளின்பால் ஜெயசீலன் வழங்கினார். மாநிலப் போட்டிகளில் வென்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் 3 சதவிகித ஒதுக்கீடு உள்ளது என்று விளையாட்டு அலுவலர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com