கால்நடை மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டி திருட்டு

கை அருகே சாத்தரசன்கோட்டையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டியை திருடிச் சென்ற

சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாத்தரசன்கோட்டையில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்குரிய மருந்துகளை பாதுகாக்கும் வகையில் அங்கு குளிர்சாதனப் பெட்டி வைக்கப்பட்டிருந்ததாம். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன், மருத்துவமனையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், குளிர்சாதனப் பெட்டியை திருடிச் சென்றனர்.  இதுகுறித்து சாத்தரசன்கோட்டை கால்நடை மருத்துவர் பிரபு கொடுத்த புகாரின் பேரில், சிவகங்கை தாலுகா போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com