ராஜபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-ஆவது பிறந்த தின விழா நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.சங்கர்கணேஷ் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி காந்தி சிலை அருகே உள்ள இந்திரா காந்தியின் உருவப்படத்துக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.தளவாய் பாண்டியன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.