"கடைகளில் அளவுக்கு அதிகமாக பட்டாசு இருப்பு வைக்கக் கூடாது'

பட்டாசு கடைகளில் உரிமம் பெற்றதற்கும் அதிகமாக பட்டாசு இருப்பு வைக்கக் கூடாது என தமிழ்நாடு பட்டாசு

பட்டாசு கடைகளில் உரிமம் பெற்றதற்கும் அதிகமாக பட்டாசு இருப்பு வைக்கக் கூடாது என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்.இளங்கோவன் தெரிவித்தார். 
இது குறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது: 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையாளர்கள், பட்டாசு தயாரிப்பாளர்களிடமிருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.
பட்டாசு விற்பனை கடைகளில், எந்த அளவுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு மட்டுமே பட்டாசு இருப்பு வைக்க வேண்டும். கூடுதல் இருப்பு வைக்க வேண்டும் எனில், அனுமதி பெற்று இருப்பு வைக்க வேண்டும். அப்படி இருப்பு வைக்கும் போது, மற்ற வகை பட்டாசுகளுடன் தீப்பெட்டி, மத்தாப்பூ மற்றும் கேப் வெடிகளை வைக்கக் கூடாது.
பட்டாசு பண்டல்களை கடையில் இறக்கும் போதும், கடையிலிருந்து லாரிகளில் ஏற்றும் போதும் மிக கவனமாக செயல்பட வேண்டும் என சுமைதூக்கும் தொழிலாளர்களிடம் அறிவுறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு கடையின் முன்பு வைத்து பட்டாசு கொளுத்தி காண்பிக்கக்கூடாது.
கடையில் மின்கசிவு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கடையில் தீயணைக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேவண்டும். கடையில் சுவாமி படங்களுக்கு பத்தி, சூடம் பொருத்துவது கூடாது. கடையின் அருகில் புகைப்பிடிக்ககூடாது. 
கடைகளில் ரேக்குகளில் உயரே அடுக்கப்படும் பட்டாசு பெட்டிகளை கையால் கீழே தள்ளக்கூடாது. ஏணி அமைத்து கவனமாக எடுக்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரிகள் சோதனைக்கு வந்தால், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com