சிவகாசியில் கிட்டங்கிகளில் பதுக்கிய ரூ.30 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்: 2 பேர் கைது

சிவகாசியில் அனுமதியின்றி கிட்டங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை வருவாய்த்துறையினர் சனிக்கிழமை

சிவகாசியில் அனுமதியின்றி கிட்டங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை வருவாய்த்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசு கிட்டங்கிகளுக்கு சீல் வைத்து இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி -சாத்தூர் சாலையில் சிவகாமிபுரம் காலனிப் பகுதியில் உள்ள பட்டாசு கடைக்காரர், ஒருவர் அனுமதியின்றி கிட்டங்கியில் பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிவகாசி வட்டாட்சியர் பரமானந்தராஜா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அதில், ஜெயபால் (45) என்பவர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற்று, சிவகாமிபுரம் பகுதியில் பட்டாசு கடை வைத்துள்ளார். ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக பட்டாசு வைத்திருந்ததும், கடையின் அருகே மூன்று கிட்டங்கிகளில், அனுமதியின்றி ரூ 20 லட்சம் மதிப்பிலான பேன்சி ரகம், மத்தாப்பூ வகை பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பட்டாசு கடையில் இருப்பு விவரம் புத்தகம் இல்லையாம். இதேபோல், அப்பகுதியில் சுந்தர்(46) என்பவரின் லாரி செட்டிலும் அனுமதியின்றி ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசு பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறையினர் கண்டறிந்தனர்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் முருகன் அளித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிந்து, கிட்டங்கிகளுக்கு சீல் வைத்து, ஜெயபால், சுந்தரை கைது செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com