புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த, திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த, திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தென் திருப்பதி எனப் போற்றப்படும் இக்கோயில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடமேற்கில் 3 கி.மீ. தூரத்தில் மலையின் மேல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஐந்து சனிக்கிழமையும், புரட்டாசி சனி வாரத் திருவிழா நடைபெறும். மூன்று மற்றும் ஐந்தாம் சனிக்கிழமைகளில் பல்லாயிரக் கணக்கானோர் சுவாமி தரிசனத்துக்காக வந்து செல்வர்.
இந்நிலையில் முதல் சனிக்கிழமையையொட்டி, அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
செய்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் 5 காவல் ஆய்வாளர்கள், 30 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 260 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் அ.இளங்கோவன் தலைமையில் அறநிலையத் துறைப் பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ராஜபாளையத்தில்: ராஜபாளையம் திருமலை திருப்பதி வெங்கடேச தேவஸ்தான மையத்தில் உள்ள பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதேபோல், கலங்கப்பேரி சாலையில் உள்ள வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில், கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பெருமாளுக்கு பூஜை, திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com