திருச்சுழி நூலகத்தில்  தைத்திருநாள் கவியரங்கம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள கிளைப் பொதுநூலகம் சார்பில் தைத்திருநாள் கவியரங்கம் மற்றும்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள கிளைப் பொதுநூலகம் சார்பில் தைத்திருநாள் கவியரங்கம் மற்றும் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஆர்.ஸ்டீபன் பொன்னையா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன், புலவர் கண.கணேசன், திருச்சுழி தனியார் பள்ளி ஆசிரியர் இரா.கனகராஜ், தேவாங்கர் கலைக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர்  எஸ்.செந்தில்குமார், சேதுபொறியியல் கல்லூரிப் பேராசிரியர் பூ.மீனாட்சி சுந்தரம், சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதனைத்தொடர்ந்து  திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி , ஸ்ரீபத்திரகாளியம்மன் தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், நடனம் உள்ளிட்ட  கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து  "அருமை வாழ்வியலே,நமக்கு அழகியல் சிந்தனைகள்',  "சினம் காக்க, மனம் காக்க, குணம் காக்க'*எனும் தலைப்பில் நடைபெற்ற தைத்திருநாள் கவியரங்கத்திற்கு இந்துசமய அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர் தி.சு.நாகநாதன் நடுவராக இருந்தார். 
இதில் ஆசிரியைகள் சாந்தி பூமிநாதன், செல்வ லட்சுமி ஆகியோர் சினம் காக்க எனும் தலைப்பிலும், கவிஞர் இரா.மணிகண்டன், ஆசிரியை நூர்ஜகான் அன்வர், ஆகியோர் மனம் காக்க எனும் தலைப்பிலும், கவிஞர்கள் இரா.கணேசன்,தங்கராஜ் ஆகியோர் குணம் காக்க எனும் தலைப்பிலும் கவிதைகள் வாசித்தனர்.
பின்னர் திருச்சுழி கிளைநூலக நூலகர் சு.பாஸ்கரன்  பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com