அதிக மதிப்பெண்கள் பெறுவோம்: மாணவர்கள் நம்பிக்கை

சிவகாசி பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிகரத்தை வெல்வோம் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவோம் என்று மாணவர்கள்


சிவகாசி பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிகரத்தை வெல்வோம் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவோம் என்று மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மாணவர்களின் கருத்து:
ஆர்.பவித்ரா (சிவகாசி) : நான் முதல் முறையாக அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளேன். பாடத்தை புரிந்து கொள்வது மற்றும் தேர்வு பயத்துடன் இருந்தேன். ஆனால் சிகரத்தை வெல்வோம் நிகழ்ச்சி மூலம் பாடத்திட்டத்தை எளிதில் படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான ஊக்கம் கிடைத்தது.
பி.சர்மிளா (ஏழாயிரம்பண்ணை): மேல் படிப்பு என்ன படிப்பது என்பது குறித்து குழப்பமாக இருந்தது. ஆனால் இந்நிகழ்ச்சி மூலம் தெளிவான முடிவு கிடைத்துள்ளது. அதிக மதிப்பெண் பெற்று வெற்றியின் இலக்கை அடைவது குறித்து நன்கு தெரிந்து கொண்டு, எனது படிப்பில் மட்டுமல்ல வாழ்க்கையின் லட்சியத்தையும் புரிந்து கொண்டேன்.
ஆர்.நித்தியஸ்ரீ(குருவிகுளம்): நான் கணினித்துறையில் அதிகம் சாதிக்க விரும்புகிறேன். எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவப்படிப்பை அறிவுறுத்தினர். ஆனால் இந்நிகழ்ச்சி மூலம் வெளியிடங்களில் துணிச்சலாக சென்று பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதிக்கலாம் என்பதை புரிந்து கொண்டேன். நம் திறமையைப் பொருத்து தான் செல்லும் இலக்கை அடைய முடியும் என்பதை தெரிந்து கொண்டேன்.
கி.சஞ்சய்குமார்(திருவேங்கடம்): நான் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகிறேன். தமிழ் படிப்பில் ஆர்வம் குறைவாக இருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் தமிழில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் சாதிப்பது குறித்து சிறு கதைகள் மூலம் விளக்கியது சிறப்பாக இருந்தது. அதனால் தினமணி நாளிதழ் தொடர்ந்து படித்து, தமிழ் பாடத்தில் அதிகளவு மதிப்பெண் பெறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
ஆர்.சின்னதுரைராஜா (கோப்பையநாயக்கன்பட்டி): அரசுப் பள்ளியில் படிக்கும் எனக்கு அரசு தேர்வு என்றாலே பயமாக இருந்தது. மேலும் மேல் படிப்பு குறித்து எவ்வித நோக்கமும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் மேல்படிப்பை சரியான முறையில் தேர்தெடுத்து திறமைகேற்ப பல்வேறு துறைகளிலும் சாதிக்கலாம் என்பதை புரிந்து கொண்டேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com