விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் இளைஞர் பெருமன்ற மாநாட்டில் தீர்மானம் 

விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய மாநாட்டில்


விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய மாநாட்டை மாநிலக்குழு உறுப்பினர் செந்தில்குமார் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான பொ.லிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தி.ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் 27 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்களும், 7 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆரோன் ராஜாமணி, செயலாளராக காளிராஜ் தேர்வு செய்யப்பட்டனர். 
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசு இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவசாயக் கல்லூரி தொடங்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தி இந்த வழித்தடத்தில் புதிய ரயில்கள் இயக்க வேண்டும். பம்பை-அச்சன்கோவில்-வைப்பாறு ஆகியவற்றை இணைத்து புதிய வடிவில் அழகர் அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை நிறைவு செய்து வைத்து மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com