ஜவ்வு தேய்மானத்துக்கு கலசலிங்கம் பல்கலை. மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர், ஜவ்வு தேய்மானத்துக்கு புதிய ரோபோ கருவியை கண்டுபிடித்துள்ளார்.


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர், ஜவ்வு தேய்மானத்துக்கு புதிய ரோபோ கருவியை கண்டுபிடித்துள்ளார்.
      இப்பல்கலைக் கழகத்தில் மின்னணுவியல்  துறையில் ஸ்டெம் செல் இமேஜிங்கில் (அஈமகப நபஉங இஉகக) முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருபவர் மாணவர்  ஷேக் அப்துல்லா. இம்மாணவர் தனது புதிய கண்டுபிடிப்பு குறித்து வெள்ளிக்கிழமை  கூறியதாவது:
           மூட்டு தேய்மானத்தை சரிசெய்ய பல  மருத்துவ ஆராய்ச்சிகள் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமானது எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்கள் மூலம் தேய்ந்த சவ்வை சரிசெய்யும் முறையாகும். பயோ-மெக்கானிக் ஆக்டிவேஷன் என்ற புதிய  அறிவியல் தத்துவத்தின்படி செயல்படும் இக்கருவி, தேய்மானத்தை பயோ-சென்சார் மூலம் தானாகக் கண்டறிந்து, அதற்கு  தகுந்தவாறு செயல்படக்கூடியது.
     இக்கருவியை தேய்மானம் உள்ள இடத்தில் வைத்து இயக்கும்போது, 2  எலும்புகளுக்கிடையேயான (ச்ங்ம்ன்ழ் ஹய்க் ற்ண்க்ஷண்ஹ) இடைவெளி அதிகரித்து, தேய்மானத்தால் உண்டான எலும்பின் அமைப்பு மாறும். மேலும், எனது கண்டுபிடிப்பை சவூதியில் உள்ள தபூக் பல்கலைக்கழக மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com