சிரித்துக்கொண்டே பொய் சொல்வதில் டிடிவி. தினகரன் வல்லவர்: அமைச்சர் ஆர். காமராஜ்

சிரித்துக்கொண்டே பொய் சொல்வதில் டிடிவி. தினகரன் வல்லவர் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.

சிரித்துக்கொண்டே பொய் சொல்வதில் டிடிவி. தினகரன் வல்லவர் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோ. அரிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று பேசியது:
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. சிரித்துக்கொண்டே பொய் சொல்வதில் டிடிவி. தினகரன் வல்லவர். 18 எம்.எல்.ஏ.க்களை பொய் சொல்லியே தன்னிடம் வைத்துள்ளார். டிடிவி. தினகரன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. வழக்குகளில் இருந்து தப்பிக்கவே தன்னை மிகப்பெரிய அரசியல் தலைவராக காட்டிக்கொள்கிறார்.
ஸ்டாலினுக்கு முதல்வராக வேண்டும் என ஆசை. சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொண்டவர் ஸ்டாலின். தனது தந்தையின் மறைவை அரசியல் ஆக்கியவர். மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு எந்த வகையிலும் இடையூறு செய்யவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கக் கூடாது என்பதற்காக திமுகவால் போடப்பட்ட 5 வழக்குகள் இரவோடு இரவாக வாபஸ் பெறப்பட்டன.
திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றார் அமைச்சர் காமராஜ்.
கூட்டத்துக்கு, நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஆதி. ஜனகர், வனிதா உலகநாதன், பொதுக்குழு உறுப்பினர் தவமணி இளங்கோவன், நகர துணைச் செயலாளர் எம். குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை கழகப் பேச்சாளர்கள் நடிகர் குண்டுகல்யாணம், நெத்தியடி நாகையன், ஏ.ஜெ. ஏங்கல்ஸ், அரங்க. சத்தியமூர்த்தி, மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் பொன். வாசுகிராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நகர செயலாளர் இ. ஷாஜகான் வரவேற்றார். பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சா. செந்தமிழ்ச்செல்வன் நன்றி 
கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com