ஆலங்காடு கோயிலில் உலக நன்மை வேண்டி மகா யாகம்

திருத்துறைப்பூண்டி வட்டம், ஆலங்காடு கிராமத்தில் அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பிகா சமேத

திருத்துறைப்பூண்டி வட்டம், ஆலங்காடு கிராமத்தில் அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பிகா சமேத காசிவிஸ்வநாதர் கோயிலில் உலக நன்மை வேண்டி ஏகாதச ருத்ராபிஷேக மகா யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்கத்தின் திருவாரூர் மாவட்ட கிளை சார்பில் இந்த யாகம் நடைபெற்றது. பின்னர், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்க நிர்வாகி ஸ்ரீசுவாமிநாதன் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்து, ஆசியுரையாற்றினார். 
சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற மகா யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், இந்த வழிபாடு குறித்து ஸ்ரீசுவாமிநாதன் சிவாச்சாரியார் கூறியது:
உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், கொடிய நோய்களிலிருந்து உயிரினங்கள் காக்கப்பட வேண்டியும், உலக அமைதி வேண்டியும் ஏகாதச ருத்ராபிஷேக மகா யாகம் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு சிவ தலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இங்கு நடைபெற்ற யாகம் 21-ஆவது யாகமாகும். யாகத்துக்குப் பின்னர், சுவாமிக்கு கலச அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தின் மூலம் ஆலங்காடு கிராமம் புண்ணியம் செய்துள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com