திமுக, காங்கிரஸை கண்டித்து அதிமுக இன்று பொதுக்கூட்டம்

திமுக, காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து திருவாரூரில் அதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.25) நடைபெறுகிறது.

திமுக, காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து திருவாரூரில் அதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.25) நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழக உணவுத் துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான ஆர். காமராஜ் வெளியிட்ட அறிக்கை:
ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில், சிங்கள ராணுவத்திற்கு திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதால், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸ் கட்சியினரை போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவர் தெரிவித்த குற்றச்சாட்டு உண்மையென தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 
எனவே, இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச தெரிவித்ததன் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் பொதுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி திருவாரூர் பனகல் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும் தமிழக உணவுத் துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை வகித்துப் பேசுகிறார். தலைமை நிலைய பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் கண்டன உரை நிகழ்த்துகிறார். கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.கோபால், கு.பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com