தொலைத் தொடர்பு துறையினர் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி அனைத்து அதிகாரிகள் மற்றும்

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திங்கள்கிழமை வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 பி.எஸ்.என்.எல். நிர்வாகம் முன்மொழிவின்படி 4 ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும், அரசு விதிகளின்படி மட்டுமே நிறுவனத்திடமிருந்து ஓய்வூதியப் பங்களிப்பைப் பெற வேண்டும், பி.எஸ்.என்.எல். சொத்துக்களை மாற்றிக் கொடுக்கும் செயலை விரிவுப்படுத்தி முடிக்க வேண்டும், நிறுவனத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த பொருளாதார உதவிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அளவிலான வேலை நிறுத்தம் பிப்ரவரி 18-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தன. போராட்டத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, மன்னார்குடி ஆசாத்தெருவில் உள்ள தொலைத் தொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல்(இ.யு) கிளைச் செயலர் எஸ். மோகன், என்எப்டிஇ அமைப்பின் கிளைச் செயலர் எம். மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தம் செய்து கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
திருவாரூரில்...
திருவாரூர், பிப்.18: பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு திருவாரூர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆதரவு தெரிவித்து திருவாரூரில் திங்கள்கிழமைஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கூட்டமைப்பு தலைவர் அழகிரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் துணை ராணுவப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com