முன்னறிவிப்பின்றி மின்தடை: பொதுமக்கள் அவதி

நன்னிலம் பகுதியில் திங்கள்கிழமை முன்னறிவிப்பின்றி மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மின்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்தனர்.  

நன்னிலம் பகுதியில் திங்கள்கிழமை முன்னறிவிப்பின்றி மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மின்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்தனர்.  
நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்ட இந்த மின்தடையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது . பல மணி நேரம்  மின்சாரம் இல்லாமல் தவித்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, உடனடியாக மின்சாரம் கொடுத்து விடுவோம் என்ற பதிலையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்த மின்வாரியத்தினர், இறுதியாக நீலக்குடி பகுதியில் மின்மாற்றியில் ஏற்பட்டிருந்த பழுதை சரி செய்யும் பணி நடந்து கொண்டிருப்பதால் மின்சாரம் வருவதற்கு தாமதமாகும் என்று தெரிவித்தனர்.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மின்நிறுத்தம் செய்யப்பட்டதால் பகலில் பல மணி நேரம் மின்சாரம் இன்றி பொது மக்கள் தவித்தனர். மின்தடை செய்வதை மின்வாரியம் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, அவசரமாக மின்சாரம் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மட்டுமே முன்னறிவிப்பு இன்றி மின்தடை செய்யவும் இல்லையெனில், பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுத்து விட்டு மின்தடை செய்ய வேண்டும். அவ்வாறு மின்தடை குறித்து முன்னறிவிப்பு செய்தால் மக்கள் மின்சாரம் மூலம் செய்ய வேண்டிய தங்களின் தேவையை செய்துகொள்ள வசதியாக இருக்கும். எனவே, மின்வாரியம் வருங்காலத்தில் மின்தடை செய்யும் நிலை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்துவிட்டு மின்தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com