பிஎஸ்என்எல் ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு

பிஎஸ்என்எல் ஊழியர்களின் போராட்டத்துக்கு நன்னிலம் அருகேயுள்ள பேரளம் பகுதி நற்பணி மன்ற இளைஞர்கள்,

பிஎஸ்என்எல் ஊழியர்களின் போராட்டத்துக்கு நன்னிலம் அருகேயுள்ள பேரளம் பகுதி நற்பணி மன்ற இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து, இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலர் தியாகு ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போல பணம் சம்பாதிப்பது என்ற நோக்கத்தை விடுத்து லாப நோக்கமின்றி மக்களுக்கு சேவை செய்து வருகிறது. 
இதன் சேவை  சேவை சாதாரண நாள்களை விட  புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களின்போது தான் அனைத்து தரப்பு மக்களாலும் உணரப்படுகிறது. 
இவ்வாறு மக்கள் நல பணியாற்றி வரும் பிஎஸ்என்எல் ஊழியர்களின் பல ஆண்டுகால கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது. சில நாட்களுக்கு முன் மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தை இழுத்து மூட இருப்பதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியடை வைத்துள்ளது. 
இதைத் தொடர்ந்து வாரம் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்றினைந்து நாடு முழுவதும் பிப்ரவரி 18 முதல் 20-ம் தேதி வரை மூன்று நாள்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். 
பிஎஸ்என்எல் ஊழியர்களின் பிரதான கோரிக்கையான 4 ஜி சேவையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுடன், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கடனுதவி அளித்து அதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
அழிக்கும் முயற்சியாகவே நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com