நெல்லை அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி: 650 பேர் பங்கேற்பு

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் 650 மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் 650 மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழாவையொட்டி வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 3 முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மலரும் இலையும் என்ற தலைப்பிலும், 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கைக் காட்சி என்ற தலைப்பிலும், 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிராம காட்சிகள் அல்லது எனது ஊர் என்ற தலைப்பிலும், 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வனவிலங்குகள் என்ற தலைப்பிலும் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளை காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 72 பள்ளிகளைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். போட்டிகளில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கான பரிசளிப்பு விழா குழந்தைகள் தினமான புதன்கிழமை (நவ.14) நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com