நெல்லை அறிவியல் மையத்தில் புதிய காட்சியரங்கம்

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் புதிய காட்சியரங்கம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் புதிய காட்சியரங்கம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
பெங்களூரு விஸ்வேஷ்வரய்யா தொழிலக மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையம் கொக்கிரகுளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 
இங்கு புதிதாக 22 வகையான மாதிரிகளுடன் 850 சதுரஅடி பரப்பளவில் விநோத அறிவியல் காட்சியரங்கம் ரூ.28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கணிதம், மின்சாரம் மற்றும் காந்தவியல், ஒளியியல், உள்ளிட்டவை குறித்து எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மாணவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இந்த மாதிரிகள் நிறுவப்பட்டுள்ளன.
வளைந்த இடைவெளி வழியாக நேரான கம்பி நுழைந்து செல்லும் காட்சி, ஆறுகளில் சுழல் ஏற்படுவதை விளக்கும் மாதிரி, காற்று நீருடன் கலக்கும்போது நீரின் அடர்த்தி குறைவதால் நீரில் மிதக்கும் மிதவை மற்றும் மூழ்கும் பெர்முடா குமிழி மாதிரி, பெர்னோலி கோட்பாட்டை விளக்கும் வகையில் காற்றில் மிதக்கும் பந்து உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சூறாவளி உருவாவதன் அறிவியல், முப்பரிமாணத்தை விளக்கும் ஊசித்திரை ஆகியவை சிறுவர்களிடம் அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்தக் காட்சியரங்கத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலைக்கழக முதல்வர் ஜி.சக்திநாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் திறந்து வைத்தார். 
பெங்களூரு விஸ்வேஷ்வரய்யா தொழிலக மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியக காப்பாட்சியர் சஜூ பாஸ்கரன் வரவேற்று பேசினார். இயக்குநர் மதனகோபால் சிறப்புரையாற்றினார். மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.முத்துகுமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com