அண்ணா பிறந்த தினப் போட்டி: 300 மாணவர்கள் பங்கேற்பு

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110 ஆவது பிறந்த தினத்தையொட்டி, திமுக இளைஞரணி சார்பில் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 300 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.


தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110 ஆவது பிறந்த தினத்தையொட்டி, திமுக இளைஞரணி சார்பில் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 300 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் இளைஞரணி அறக்கட்டளை சார்பில் சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிக்கு மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பா. வில்சன் மணித்துரை தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட அமைப்பாளர் பூ. ஆறுமுகச்சாமி, கிழக்கு மாவட்ட அமைப்பாளர் சு. செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியை மாவட்டச் செயலர்கள் இரா. ஆவுடையப்பன் (கிழக்கு), மு.அப்துல் வஹாப் (மத்திய மாவட்டம்) ஆகியோர் தொடங்கிவைத்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.பி.எம். மைதீன்கான், ஏ.எல்.எஸ். லட்சுமணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
கட்டுரைப் போட்டி: வடகரை முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி மாணவி எஸ். சுபஹானா பர்வீன் முதலிடம், முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி மாணவி மு. இஸ்மாயில் பீவி 2 ஆவது இடம், புன்னையாபுரம் சுயம்புலிங்கம் மேல்நிலைப் பள்ளி மாணவர் முத்துராம் 3 ஆவது இடம் பெற்றனர்.
பேச்சுப் போட்டி: திசையன்விளை ஜெயராஜேஸ் மெட்ரிக் பள்ளி மாணவி கஸ்தூரி முதலிடம், செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பள்ளி மாணவி ஹாஸ்மி பாரிஷா 2 ஆவது இடம், செங்கோட்டை பாரத் வித்யா மந்திர் பள்ளி மாணவி கீர்த்தனா 3 ஆவது இடம் பெற்றனர்.
கவிதை ஒப்பித்தல்: சாரதா பள்ளி மாணவி சு. வினிதா முதலிடம், திசையன்விளை ஜெய ராஜேஸ் பள்ளி மாணவி தீபா 2 ஆவது இடம், மேலப்பாளையம் புனித தோமையர் பள்ளி மாணவி சித்ரா 3 ஆவது இடமும் பெற்றனர். போட்டியில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில திமுக இளைஞரணி துணைச் செயலர் அசன் முகம்மது ஜின்னா, கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் என். தாமரைபாரதி ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.
இளைஞரணி நிர்வாகிகள் ஆதிபரமேஸ்வரன், முகம்மதுஅலிஜின்னா, வேல்முருகன், முத்துராமன், சரவணகுமார், ஹக்கிம், முத்துவேல், தில்லை ராஜேஸ், மாயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் கே.கே. கருப்பசாமி வரவேற்றார். மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பால்மாயாண்டி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com