சிங்கனேரியில் நீலநாக்கு நோய் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருக்குறுங்குடி சீனிவாசன் சேவைகள்

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருக்குறுங்குடி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து இந்திய-பிரிட்டிஷ் ஐக்கிய பேரரசு திட்டத்தின் கீழ், நான்குனேரி வட்டம் சிங்கனேரியில் ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய் மற்றும் ஆட்டுக்கொல்லி (பிபிஆர்) நோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாமை நடத்தின.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மா.திருநாவுக்கரசு முகாமை தொடங்கிவைத்தார். கால்நடை நுண்ணுயிரியல் துறை தலைவர் ஜே.ஜான்சன் ராஜேஸ்வர்,  செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு நீலநாக்கு மற்றும் பி.பி.ஆர். நோய் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.  நான்குனேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர் பி.பீர் முகமது, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
கல்லூரியின் கால்நடை சிகிச்சை வளாக பேராசிரியர் மற்றும் தலைவர் இரா. ராம்பிரபு வரவேற்றார். கால்நடை உணவியல் துறை  தலைவர்  ம.செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.   
முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளுக்கு நீல நாக்கு நோய் தடுப்பூசியும், 300 வெள்ளாடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியும் போடப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட கறவை மாடு, எருமைகள், கன்றுகள், வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறைக் கருவூட்டல்,  மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com