நெல்லையில்  புதிய எல்.ஐ.சி. பாலிசி அறிமுகம்

"ஜீவன் சாந்தி' எனும் புதிய ஆயுள் காப்பீடு பாலிசி அறிமுக விழா பாளையங்கோட்டையில் எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 

"ஜீவன் சாந்தி' எனும் புதிய ஆயுள் காப்பீடு பாலிசி அறிமுக விழா பாளையங்கோட்டையில் எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
இந்தப் புதிய பாலிசியை அறிமுகம் செய்துவைத்த முதுநிலை கோட்ட மேலாளர் கே. வசந்த் குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆயுள் முழுவதும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், பாலிசி தொடங்கிய நாளில் இருந்து உத்தரவாதம், உடனடியாக ஓய்வூதியம், ஒத்திவைப்பு ஓய்வூதியம் பெறலாம். ஒத்திவைப்பு ஓய்வூதியத்தை தனியாகவோ அல்லது கூட்டு லைஃபாகவோ பெற்றுக் கொள்ளலாம். ஒத்திவைப்பு காலம் 1 முதல்
20 வரை ஆகும். 
குறைந்தபட்ச முதலீட்டுத்தொகை ரூ. 1.50 லட்சம். அதிகபட்ச முதலீட்டுக்கு உச்ச வரம்பில்லை. ஓய்வூதியத் தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் பெறலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், தனிநபர், தம்பதிகள், மாற்றுத் திறனாளிகள் இத்திட்டத்தில் சேரலாம்.  இறப்புத் தொகையை உடனடியாகவோ, தவணை முறையிலோ ஓய்வூதியமாகப் பெறலாம். என்.பி.எஸ். சந்தாதாரர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் திட்டத்தில் அனைத்து விதமான ஓய்வூதியம் வழிமுறைகளும் உள்ளன. கடன், சரண்டர் வசதியும் உண்டு. இப்புதிய பாலிசி கோட்டத்திலுள்ள 16 கிளை, 13 துணைக் கிளைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
அப்போது, வணிக மேலாளர் இ.கி. வெங்கடகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com