நெல்லையில் நாளை வன உயிரின வார விழா போட்டிகள்

வனத் துறை சார்பில் வன உயிரின வார விழா போட்டிகள் திருநெல்வேலியில் திங்கள்கிழமை (செப். 24) நடைபெறவுள்ளன.


வனத் துறை சார்பில் வன உயிரின வார விழா போட்டிகள் திருநெல்வேலியில் திங்கள்கிழமை (செப். 24) நடைபெறவுள்ளன.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட வன அலுவலரும் வன உயிரினக் காப்பளருமான எஸ். ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வன உயிரின வார விழா, வன உயிரினங்கள், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வன உயிரின வார விழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, 2018ஆம் ஆண்டுக்கான வன உயிரின வார விழா போட்டிகள் (ஓவியம், கட்டுரை, விநாடி-வினா) பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை (செப். 24) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளன.
எல்.கே.ஜி. முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனிப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். எல்.கே.ஜி. முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்-மாணவிகள் வன உயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு அல்லது வன உயிரினங்களைப் பாதுகாத்தலின் அவசியம் என்ற தலைப்பிலும், 9ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலான மாணவர்கள் வன உயிரினங்களைப் பாதுகாத்தலின் அவசியம் என்ற தலைப்பிலும் 3 நிமிடங்கள் பேச வேண்டும். சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன உயிரினம் என்ற தலைப்பில் விநாடி-வினா போட்டியும் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களில் வரும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கப்படும். பேச்சு, ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்குபெறுவர். மேலும் விவரங்களுக்கு 0462 2553005 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com