ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு எதிராக நெல்லையில் செப். 28இல் கடையடைப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக திருநெல்வேலியில் இம்மாதம் 28ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக திருநெல்வேலியில் இம்மாதம் 28ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் கருப்பையா, பொருளாளர் சங்கரவேலு, நிர்வாகச் செயலர் ஸ்டீபன் ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. ஆன்-லைன் மூலம் மருந்தை வாங்கும் மக்களால் அதன் தரத்தை அறிந்துகொள்ள முடியாது. மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் தர மருந்தாளுநர் வசதி ஆன்-லைன் வர்த்தகத்தில் இல்லை. ஆன்-லைன் மருந்து வணிகம் பெருகினால் முறையான உரிமம் பெற்று மருந்து கடை நடத்தி வரும் மருந்து வணிகர்கள் தொழில் நசிந்துபோகும்.
மேலும், போலி மருந்துகள் விற்பனைக்கு ஏதுவாக அமையும். ஆன்-லைன் மூலம் தூக்க மாத்திரை, வீரிய மாத்திரை, கருத்தடை மாத்திரை எளிதில் கிடைக்கும்போது சமுதாயச் சீரழிவு ஏற்படும். 
எனவே, ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு எதிராக இம்மாதம் 28ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடைபெறும்.  திருநெல்வேலி மாவட்டத்தில் சில்லரை மருந்து கடை, மொத்த மருந்து கடை என மொத்தம் 1,200 கடைகள் அடைக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com