நான்குனேரி அருகே காவலர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற தனிப்பிரிவு காவலர் கொலை செய்யப்பட்டது

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற தனிப்பிரிவு காவலர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், 5 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
நான்குனேரி வட்டம், முனைஞ்சிப்பட்டி அருகேயுள்ள கீழசிந்தாமணியைச் சேர்ந்த ஜெபஸ்டின் மகன் ஜெகதீஸ் துரை (32). இவர், விஜயநாராயணம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தார். 2018 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி  நம்பியாற்றில்  டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்றபோது கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.   இதுகுறித்து விஜயநாராயணம் போலீஸார் வழக்குப்பதிந்து,  தாமரைக்குளத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் முருகன்,  உய்க்காட்டான் மகன் கிருஷ்ணன் (48), வேலாயுதம் மகன் முருகப்பெருமாள் (18), கல்மாணிக்கபுரத்தைச் சேர்ந்த மணிக்குமார் (24), முருகன் மகன் ராஜாரவி (25), ஆறுமுகம் மகன் அமிதாப்பச்சன் (29) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர், குற்றஞ்சாட்டப்பட்ட  முருகன், கிருஷ்ணனுக்கு ஆயுள் சிறைத்தண்டனை மற்றும்  ரூ.10 ஆயிரம் அபராதமும், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். முருகப்பெருமாள் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞர் சிவலிங்கமுத்து ஆஜரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com