பேட்டை ஐடிஐயில் தொழில் பழகுநர் பயிற்சி: மார்ச் 1-இல் மாணவர் சேர்க்கை முகாம்

திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) தொழில் பழகுநர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை முகாம் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. 

திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) தொழில் பழகுநர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை முகாம் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. 
இதுதொடர்பாக  மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலர் ப.ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
திருநெல்வேலி பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐடிஐ, 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு  தேசிய தொழில்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் திருநெல்வேலி மண்டல அளவில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வரும் மார்ச் 1-இல் நடைபெறுகிறது. 
ஐ.டி.ஐ. முடித்தவர்கள்,  8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முகாமில் கலந்து கொள்ளத் தகுதியானவர்கள்.மத்திய,  மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 2500- க்கும் மேற்பட்ட தொழில்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் பங்கேற்று தேர்வு பெறுபவர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுநர் சான்று வழங்கப்படும். ஐ.டி.ஐ. முடித்து தேசிய தொழிற்சான்று பெற்றவரைவிட தேசிய தொழில்பழகுநர் சான்று பெற்றவர் கூடுதல் திறன் பெற்றவராக கருதப்படுவர்.
பெரிய தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கும். மேலும், தற்போது தொழில்பழகுநருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.7500 முதல் ரூ.13,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஐடிஐ  முடித்தவர்கள் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு  மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலரை  0462-2342432 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com