மோடியின் வருகை தமிழகத்தில் திருப்புமுனையை உருவாக்கும்: தமிழிசை செளந்தரராஜன்

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கும் என்றார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.


பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கும் என்றார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது: மதுரையில் ரூ.1300 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இம் மாதம் 27 ஆம் தேதி வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன்மூலம் தமிழக மக்களுக்கு உயர்தரமான சிகிச்சை கிடைக்கும்.
தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இதுவரை சுமார் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் தமிழகத்துக்கு முதலீடுகளும், திட்டங்களும் கிடைத்துள்ளன.
இந்தியாவில் மீண்டும் மோடி என்கிற முழக்கம் உருவாகத் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நின்றாலும், பலவீனமாகவே உள்ளனர். பிரதமர் வேட்பாளரை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற விழாவின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதை மீண்டும் முன்மொழியவோ, பிற தலைவர்களின் ஆதரவைத் திரட்டவோ முன்வராதது வேடிக்கையாக உள்ளது.
மாநில சுயாட்சி பேசிய கட்சிகள் அனைத்தும் தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசும் நிலைக்கு மாறியிருப்பதே பாஜக அரசின் வெற்றி. மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால், வரும் தேர்தலில் பாஜக கூட்டணி அதிகளவில் தமிழகத்தில் வெற்றி பெறும் என்றார் அவர்.
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அ.தயாசங்கர், நிர்வாகிகள் டி.வி.சுரேஷ், வேல்ஆறுமுகம், மகாராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com