ஆசிரியைகள் இடமாற்றத்தை எதிர்த்து மேலப்பாளையம் பள்ளியில் முற்றுகை

ஆசிரியைகளை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களின் பெற்றோர் மேலப்பாளையம் அரசுப்

ஆசிரியைகளை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களின் பெற்றோர் மேலப்பாளையம் அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலப்பாளையம் ஹாமீம்புரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 282 மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இங்கு பணியாற்றும் இரு ஆசிரியைகளை பாளையங்கோட்டையில் அரசு சார்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் தலைமையில் மாணவ-மாணவியரின் பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறியது:  2012 ஆம் ஆண்டு முதல் இப் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தனியார் பள்ளிகளில் பயின்ற குழந்தைகளையும் இங்கு சேர்த்துள்ளோம். ஆனால், ஏற்கெனவே 30:1 என்ற விகிதப்படி ஆசிரியர்களை நியமிக்காத நிலையில், 2 ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதால் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும். இவ்விஷயத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலையிட்டு ஆசிரியைகளின் பணியிடமாற்றத்தை ரத்து செய்யவேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com