இன்று 2ஆம்கட்ட மஹா கும்பாபிஷேகம்

திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் புதன்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 

திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் புதன்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 
பஞ்சபூதத் திருத்தலங்களில் நீர்த்தலமானது திருவானைக்கா கோயில். இத்திருக்கோயில் முதல்கட்ட மஹா கும்பாபிஷேகம் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. 
இதில் கோயிலில் உள்ள 45 பரிவார தேவதைகள் மற்றும் உற்ஸவ மூர்த்தி சன்னதிகள், விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 2 ஆம் கட்ட கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் நடைபெறுகிறது.
இதில் ராஜகோபுரம், மல்லப்ப கோபுரம், கார்த்திகை கோபுரம், சங்கமேசுவரர் கோபுரம், சுந்தர பாண்டியன் கோபுரம் மற்றும் சிறிய ரக கோபுரம் ஆகிய விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 9 ஆம் தேதி தொடங்கி 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 
மஹா கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 
விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கே.ஜெயப்பிரியா மற்றும் உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com