காவிரி ஆற்று தண்ணீரும், மணலும் தமிழ்த் தலைமுறைக்கு சொந்தம்

காவிரியாறும், ஆற்றுத்தண்ணீரும், ஆற்றுமணலும் தமிழ்த்தலைமுறைக்கு சொந்தமானது என்றார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன்.


காவிரியாறும், ஆற்றுத்தண்ணீரும், ஆற்றுமணலும் தமிழ்த்தலைமுறைக்கு சொந்தமானது என்றார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன்.
திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் பாலம் உடைந்த பகுதியை திங்கள்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
கேரளம், கர்நாடக மாநிலங்களில் இயற்கை கொடுத்த பெருமழையால், தமிழகத்துக்கு கிடைத்த தண்ணீரில் 200 டிஎம்சிக்கும் அதிகமான தண்ணீர் முக்கொம்பு கொள்ளிடம் மேலணை உடைப்பு காரணமாக வீணாகிவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல அணைகள் இன்னும் உறுதியாக உள்ள உள்ள நிலையில், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரிப் படுகை பகுதி முழுவதும் நடைபெற்ற மணல் கொள்ளைகாரணமாகத்தான் இந்த அணை உடைந்துள்ளது.
காவிரியாறும், ஆற்றுத்தண்ணீரும், ஆற்று மணலும் தமிழ் தலைமுறைக்கு, எதிர்காலத்துக்குச் சொந்தமானது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும், இனியாவது மணலைத் திருடாமல் எங்கள் தலைமுறைக்கு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். இல்லையெனில் போராட்டம் நடைபெறும். அந்த போராட்டத்தை எதை கொண்டும் சமாளிக்க முடியாது. சர்கார் திரைப்படத்தை கவனிப்பதைக் காட்டிலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசு கவனிக்க வேண்டும் என்றார்.
முக்கொம்பு காவிரி மேலணை பூங்காவை அடுத்துள்ள அணைப் பகுதிக்குள் திரைப்பட இயக்குநர் கௌதமன் நுழைய முயன்ற போது, பூங்காவரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது எனக் கூறியதால், அந்த இடத்திலிருந்தே பணிகளைப் பார்வையிட்டு அவர் திரும்பிச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com