கஜா புயல்: நாகை, திருவாரூர் மாவட்டத்துக்கு 400 துப்புரவுப் பணியாளர்கள் அனுப்பி வைப்பு

கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்  சீரமைப்புப் பணிகளை

கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்  சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள திருச்சியிலிருந்து 400 துப்புரவுப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பெருமளவிலான சேதத்தை சந்தித்துள்ளன. அந்த மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்திலிருந்து கூடுதல் பணியாளர்களை அனுப்புமாறு திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்கள், கோரியிருந்தனர். அதன் அடிப்படையில், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின்சார்பில் பல்வேறு பேரூராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் பணிபுரியும்  400 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் 4 பேருந்துகள், 15 லாரிகளில் திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சீரமைக்கும் பணிக்குத் தேவையான மரம் அறுக்கும் இயந்திரங்களும் மற்றும் இதர இயந்திரங்கள் கொண்டு சென்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் மற்றும் மாநகராட்சி வளாகத்திலிருந்து துப்புரவுத் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் தா.சாந்தி,  பொறியாளர் எஸ். அமுதவள்ளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com